Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்தில் போலீஸாக நடிப்பது யார்னு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (10:24 IST)
ரஜினியின் ‘காலா’ படத்தில், போலீஸாக பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்கிறார்.


 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படம் ‘காலா’. ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மும்பையில் வாழ்ந்த தாதாவைப் பற்றிய கதை இது என்பதால், தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்தப் படத்தில், பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி போலீஸாக நடிக்கிறார். “ரஜினி சார் படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மிகப்பெரிய விஷயம். இந்த சினிமா உலகத்திலேயே அவரைத்தான் நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன். எந்த விஷயத்தில் என்றால், சூப்பர் ஸ்டாராக இருந்தும் இவ்வளவு எளிமையாக இருக்கிறார். ஒரு நடிகனாக மேக்கப்போ, கெட்டப்போ போட்டுக் கொள்ளலாம். ஆனால், வாழ்க்கையில் உண்மையானவனாகவும், எளிமையானவனாகவும் இருக்க வேண்டும். இன்றைய தலைமுறை நடிகர்கள் ரஜினியிடம் இருந்து அதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் பங்கஜ் திரிபாதி.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments