Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா படம் எவ்வளவு முடிந்திருக்கிறது… இயக்குனர் வெளியிட்ட தகவல்!

சூர்யா படம் எவ்வளவு முடிந்திருக்கிறது… இயக்குனர் வெளியிட்ட தகவல்!
, செவ்வாய், 8 ஜூன் 2021 (07:59 IST)
இயக்குனர் பாண்டிராஜ் சூர்யா 40 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இயக்குனர் பாண்டிராஜ் தன் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளத்தில் சூர்யா 40 படத்தின் அப்டேட்டை ரசிகர்களுக்கு வெளியிட்டார். அதில் படத்தின் படப்பிடிப்புகள் 35 சதவீதம் முடிந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மீதமுள்ள படப்பிடிப்பு தளர்வுகள் முடிந்ததும் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறனின் அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும்… இயக்குனர் கார்த்திக் நரேன்!