ஹோட்டல் டாஸ்க்கிலும் பஞ்சாயத்து! வேற வேலையே இல்லையா? - Biggboss season 9

Prasanth K
புதன், 5 நவம்பர் 2025 (10:47 IST)

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதமாகி விட்ட நிலையில் வீட்டிற்குள்ளே சண்டையை தவிர்த்து எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. டாஸ்க்கில் சண்டை போடுவதை விட்டு விட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து சண்டை போடுவது ஆடியன்ஸுக்கு அயற்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

இதுதொடர்பாக பிக்பாஸ், விஜய்சேதுபதி என எல்லாரும் எப்படி விளையாட வேண்டும் என பால்வாடி பிள்ளைகளுக்கு க்ளாஸ் எடுப்பது போல ஹவுஸ்மேட்ஸுக்கு க்ளாஸ் எடுத்தும் அவர்கள் புரிந்துக் கொள்வதாய் இல்லை. இந்நிலையில்தான் உள்ளே வைல்ட் கார்ட் எண்ட்ரியில் 4 பேர் சென்றுள்ளனர். அவர்களில் திவ்யா கணேஷ் வீட்டு தலயாக மாறியுள்ளார். பொறுப்பேற்ற நாள் முதலாக வீட்டில் கச்சாமுச்சா என்று இருந்த சத்தம் போடும் பழக்கத்தை சற்றே குறைத்துள்ளதை அவரது வெற்றி என்றே சொல்லலாம். முக்கியமாக விஜே பாருவை ஆஃப் செய்தது.

 

இந்த வாரத்தை இன்னும் சுவாரஸ்யம் ஆக்க ‘ஆஹா ஓஹோ ஹோட்டல்’ டாஸ்க் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தீபக், பிரியங்கா உள்ளிட்ட 3 பேர் விருந்தினர்களாக சென்றுள்ளனர். அவர்கள் ப்ரவீனை கூப்பிட்டு ஏதோ கேட்க அதற்கு விஜே பாரு ‘நான் தான் அசிஸ்டெண்ட் மேனேஜர்’ என ப்ரவீனிடம் கம்பு சுற்றுகிறார். இந்த டாஸ்க்கையுமே சண்டையாக மாற்றிவிடும் முனைப்பு பார்வதியிடம் உள்ளது.

 

அதற்கேற்ப இன்று துஷாருக்கும், திவ்யாவுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. ஹோட்டல் மேனேஜராக பொறுப்பில் உள்ள திவ்யா எல்லாரும் உடனே யூனிபார்ம் அணிந்து வேலைக்கு வர சொல்ல அந்த இடத்தில் பிரச்சினை வெடித்துள்ளது. விருந்தினராக வந்தவர்களே மேனேஜர் பேச்சை யாரும் கேட்க மாட்றாங்களே என கேட்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. இந்த வார டாஸ்க்காவது சுவாரஸ்யமாக செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்! நடிகர் துல்கர் சல்மானுக்கு சம்மன்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் ஏ ஆர் ரஹ்மான்… ‘பெட்டி’ முதல் சிங்கிள் அப்டேட்!

சம்பளத்தைக் கொஞ்சம் கம்மியாக வாங்குங்கள்.. சக நடிகர்களுக்கு விஷ்ணு விஷால் கோரிக்கை!

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments