Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“முன்னாடி பின்னாடி என்ன இருந்தது…” வயிறு குலுங்க சிரிக்க வைத்த பஞ்சதந்திரம்… 20 வருஷம் ஆயிடுச்சா?

“முன்னாடி பின்னாடி என்ன இருந்தது…” வயிறு குலுங்க சிரிக்க வைத்த பஞ்சதந்திரம்… 20 வருஷம் ஆயிடுச்சா?
, செவ்வாய், 28 ஜூன் 2022 (15:41 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றான பஞ்சதந்திரம் ரிலீஸாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

2002 ஆம் ஆண்டு கமல், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், யூகி சேது, ஜெயராம், ஸ்ரீமன் மற்றும் ரமேஷ் அரவிந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். ஹாலிவுட் படமான வெரி பேட் திங்ஸ் படத்தின் தழுவலில் இந்த படம் உருவாக்கப்பட்டது. கமலும் கிரேசி மோகனும் இணைந்து படத்தின் கதை வசனத்தை எழுதி இருந்தனர். திரையரங்க வெளியீட்டின் போது பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், அதன் பின்னர் இந்த படம் ஒரு நகைச்சுவை படங்களுக்கு என ஒரு பெஞ்ச் மார்க் படமாக அமைந்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் பார்ட் 2 வருமா என ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்துக்காக இந்த படத்தின் நடிகர்கள் இணைந்து உருவாக்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த திரைப்படம் ரிலீஸாகி தற்போது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் படம் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவன் கெட்டப் பார்த்து ஷாக் ஆன சூர்யா… வைரலாகும் ராக்கெட்ரி ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!