Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார நாட்களிலும் கணிசமான வசூல்.. வெற்றியை நோக்கி செல்லும் படை தலைவன்!

vinoth
புதன், 18 ஜூன் 2025 (10:20 IST)
மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ’படை தலைவன்’ திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பிறகு கடந்த வாரம் ரிலீஸானது.  இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் கௌரவமான வசூலைப் பெற்று வருகிறது. மூன்று நாளில் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது ‘படை தலைவன்’ 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் லாபம் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கு மூலமாக 10 கோடி ரூபாயாவது ஈட்ட வேண்டும். அதை படை தலைவன் ஈட்டுமா என்பது இந்த வாரத்தில் ரசிகர்களின் ஆதரவு படத்துக்குக் கிடைப்பதைப் பொறுத்துதான் உள்ளது.

இந்நிலையில் படம் வெளியாகி 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 5.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ஆன்லைன் டிராக்கிங் தளமான sacnilk தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த வார இறுதியில் இந்த படம் லாபத்தை நோக்கி செல்லும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்சேபத்துக்குரியக் காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்… மனுஷி படம் குறித்து சென்சார் வாரியம் பதில்!

ஒரே காரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. மும்பையில் டேட்டிங் சென்றார்களா?

சண்முக பாண்டியன் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும்… தேமுதிக நிர்வாகிகள் விருப்பம்!

இனி அமேசான் ப்ரைம் தளத்திலும் விளம்பரங்கள்… பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி!

‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments