மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படை தலைவன் திரைப்படம் பல தடங்கல்களுக்குப் பிறகு கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தை வால்டர் மற்றும் ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படம் கௌரவமான வசூலைப் பெற்று வருகிறது. மூன்று நாளில் மொத்தம் மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது படை தலைவன் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் லாபம் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கு மூலமாக 10 கோடி ரூபாயாவது ஈட்ட வேண்டும். அதை படை தலைவன் ஈட்டுமா என்பது இந்த வாரத்தில் ரசிகர்களின் ஆதரவு படத்துக்குக் கிடைப்பதைப் பொறுத்துதான் உள்ளது.
இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் நடந்த தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் “சண்முக பாண்டியன் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். அது கட்சிக்கு மறைமுகமாக உதவும்” எனத் தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் மறைவுக்குப் பின்னர் தேமுதிகவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.