Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்க்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

விஜய்க்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்
, சனி, 17 பிப்ரவரி 2018 (18:09 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சேசிங் காட்சி ஒன்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் படத்தின் படப்பிடிப்பு நடத்த கல்லூரி முதல்வர் அனுமதி அளித்துள்ள போதிலும், . மாணவர்களின் படிப்பிற்கு படப்பிடிப்பு குழுவினர் பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கல்லூரி முதல்வரிடம் படக்குழுவினர் அமைதியாக படப்பிடிப்பு நடத்துவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களில் பெரும்பாலானோர் அஜித் ரசிகர்கள் என்பதால் இந்த போராட்டம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்குரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு