Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளியானது பாவக்கதைகள் டீசர் – ரிலிஸ் தேதியும் அறிவிப்பு!

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (11:20 IST)
நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒரே மாதிரியான கதைக் கருவைக் கொண்ட  சில குறும்படங்களை இணைத்து ஒரு திரைப்படமாக எடுப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் இந்த வகையான ஜானர் படங்கள் இப்போது அதிகளவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. வைல்டு டேல்ஸ் எனும் அர்ஜெண்டினிய படம் இந்த ஜானரில் வெளிவந்து உலக அளவில் அங்கிகாரம் பெற்றதை அடுத்து இப்பொது உலகெங்கும் பல மொழிகளில் அதுபோல படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

அந்த வரிசையில் தமிழில் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் புதிய ஆந்தாலஜி படத்துக்காக வெற்றி மாறன், கெளதம் மேனன், விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இதற்காக இவர்கள் நான்குபேரும் தனித்தனியாக குறும்படங்களை இயக்க உள்ளனர். அந்த 4 குறும்படங்களின் கதைக்கருவும் ஆணவக் கொலை சம்மந்தப்பட்டதாக இருக்கும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 18 ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசரை நேற்று வெளியிட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இணையத்தில் அந்த டீசர் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments