Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரைட்டர் படத்தின் பிரீமியரை அறிவித்த முன்னணி தொலைக்காட்சி!

ரைட்டர் படத்தின் பிரீமியரை அறிவித்த முன்னணி தொலைக்காட்சி!
, புதன், 20 ஏப்ரல் 2022 (17:58 IST)
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ரைட்டர் திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்புத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவான திரைப்படம் ரைட்டர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசிய இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தின் தொலைக்காட்சி பிரிமீயர் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியின் இந்தி படத்தில் இணைந்த ராதிகா… வைரலாகும் புகைப்படம்!