Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப் சீரிஸாக உருவாகும் பா ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’?

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (07:52 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டுக்குள் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை கதையை மூன்று சீசன்கள் கொண்ட ஒரு வெப் சீரிஸாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments