Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்… வெளியான தகவல்!

vinoth
புதன், 26 பிப்ரவரி 2025 (07:47 IST)
பல ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக ஒரு கமர்ஷியல் வெற்றியை ருசித்தார் மணிரத்னம். அதன் பிறகு இப்போது அவர் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மணிரத்னம் தன்னுடைய அடுத்த பட வேலைகளைத் தற்போது தொடங்கியுள்ளார். அவர் இயக்கும் இளமையானக் காதல் கதையில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

ஐந்தாவது நாளில் அதல பாதாள வசூல்… இந்தியன் 2 வசூலையாவது தொடுமா தக் லைஃப்?

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments