Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் ஜாலியாக இருக்கார்… மாமன்னன் இசை வெளியீட்டில் அப்டேட் கொடுத்த பா ரஞ்சித்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (10:51 IST)
சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படங்களுக்குப் பிறகு இயக்குனர் பா ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் பார்வதி, மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

ஷுட்டிங் மதுரை மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் முதலில் நடந்தது. அதன் பின்னர் கே ஜி எஃப்-ல் ஷூட்டிங் நடந்தது. இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தங்கலான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் படத்தின் ஷூட்டிங் பயிற்சியின் போது விக்ரம்முக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டதால் ஷுட்டிங் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இப்போது மாமன்னன் பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட பா ரஞ்சித் தங்கலான் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

அவரது பேச்சில் “தங்கலான் ஷூட்டிங் வரும் 15 ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்க உள்ளது. அதோடு முழு படமும் முடிகிறது. விக்ரம் சார் ரொம்ப ஜாலியா இருக்காரு” எனப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக விக்ரம் ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கிறார். அது தங்கலான் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments