Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏங்க என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே குறியா இருங்கீங்க - கோபத்தில் கொந்தளித்த கீர்த்தி சுரேஷ்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (10:37 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
இதனிடையே கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் அது உண்மையில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பள்ளி நண்பர் ஒருவரை 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருவதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 
 
அதை உறுதிப்படுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன்னர் ஃபர்ஹான் என்ற தனது நண்பரின் பிறந்தநாளுக்காக அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து வாழ்த்தியிருந்தார். உடனே இவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலரா என்று வதந்திகள் பரவ தொடங்கின. இதையடுத்து கீர்த்தி சுரேஷிடம் இது குறித்து பத்திரிகையாளர் கேட்டதற்கு, "கோபப்பட்டு பதில் சொன்ன அவர் "ஏங்க.. என்னை கல்யாணம் பண்ணி குடுக்குறதுலயே இருங்கீங்க.. நடக்குறப்ப நானே சொல்றேன்" என கூறி இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

கவர்ச்சி உடையில் அழகுப் பதுமையாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ 5 நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

ஆண்கள் எல்லாம் அழிஞ்சு போங்க.. நாசமா போங்க.. பாடகி சின்மயி சாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments