Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பட்டா பரம்பரை 2 தற்போதைக்கு இல்லையாம்.. இதுதான் காரணமா?

vinoth
புதன், 19 மார்ச் 2025 (10:49 IST)
ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது பா ரஞ்சித் தங்கலான் படத்திலும், ஆர்யா தன்னுடைய வேறு சில படங்களிலும் நடித்து வருவதால் சார்பட்டா 2 திரைப்படம் பற்றி அடுத்தகட்ட நகர்வு எதுவும் நடக்கவில்லை. படத்துக்கு பட்ஜெட்டாக சுமார் 80 கோடி ரூபாயை இயக்குனர் ரஞ்சித் கூறினாராம். இதனால் படத்தைத் தயாரிக்க முதலீடு செய்ய வந்த முதலீட்டாளர்களில் ஒன்றான ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது பின் வாங்கிவிட்டதால் தற்போதைக்கு அந்த படம் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் இனிமேல் புதிய பைனான்ஸியர் கிடைத்த பின்னர்தான் சார்பட்டா 2 துவங்கப்படும் என சொல்லப்படுகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments