நடிகர் ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடித்த J.பேபி என்ற திரைப்படம் கடந்த எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தன்னுடைய நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியிருந்தார். படத்தில் முக்கிய வேடங்களில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் டிரைலர் உள்ளிட்ட ப்ரமோஷன் அனைத்தும் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. ஆனால் படம் ரிலீஸான பின்னர் நல்ல விமர்சனங்கள் இருந்தும் பெரியளவில் ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று படத்தைப் பார்க்கவில்லை. அதற்கு தமிழ்நாட்டில் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மஞ்ஞும்மள் பாய்ஸ் திரைப்படமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித் இந்த படம் பற்றி பேசியுள்ளார். அதில் “ஜெ பேபி வணிக ரீதியாக வெற்றி படமா என்றால் அது சந்தேகம்தான். ஆனால் அந்த படம் எடுத்தது எங்களுக்கு மன நிறைவை தந்தது. படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள். மக்கள் இந்த படத்தைக் கொண்டாடுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.