பிக்பாஸ் வீட்டில் நேற்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆண் போட்டியாளர்கள் எஜமானர்களாகவும், பெண் போட்டியாளர்கள் வேலைக்காரிகளாகவும் இருக்க வேண்டும். இந்த லக்சரி டாஸ்குக்கு 1600 பாயிண்டுகள் என்பதால் வேறு வழியின்றி பெண்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில் டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே மமதி ஒரு கண்டிஷன் போட்டார். நான் தமிழ்ப்பெண். தமிழ் கலாச்சாரத்துடன் வாழ்பவர். என் கணவரை தவிர வேறு எந்த ஆணையும் தொட மாட்டேன். எனவே கைகால் அமுக்கிவிடுவது போன்ற வேலைகளை எனக்கு தரக்கூடாது என்றார்.
அதேபோல் மும்தாஜ் எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஆனால் அதற்கும் ஒரு லிமிட் உண்டு. இந்த லக்சரி டாஸ்க்கில் வெற்றி பெறுவது என்பது நீங்கள் கொடுக்கும் வேலையில் தான் உள்ளது என்று கூறி பயமுறுத்துகிறார்.
இருப்பினும் மற்ற உறுப்பினர்கள் எஜமானர்கள் கொடுத்த வேலையை செய்கின்றனர். யாஷிகா துணி துவைப்பது, ஐஸ்வர்யா, ஷாரிக்கின் கையை அமுக்கிவிடுவது போன்ற வேலைகளை செய்கின்றனர். இந்த டாஸ்க்கால் மும்தாஜ் உள்பட பெண் போட்டியாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண் போட்டியாளர்களை பழிவாங்க அவர்கள் காத்திருப்பது ஒவ்வொருவரின் முகத்தில் தெரிகிறது