பெண்ணின் திருமண வயது 21 ஆக மாற்றியது குறித்து நடிகை ஓவியா தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியதற்கான மசோதாவை தாக்கல் செய்தது என்பதும் இந்த மசோதாவுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியதை தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் பல விஷயங்களை தியாகம் செய்து மிகப்பெரிய பொறுப்பை சிறுவயதிலேயே சுமக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
நடிகை ஓவியாவின் இந்த கருத்துக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிபிடத்தக்கது.