Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

பிக்பாஸ் நிகழ்ச்சியால் பட வாய்ப்பை இழந்த ஓவியா....

Advertiesment
Big boss
, செவ்வாய், 25 ஜூலை 2017 (15:51 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை ஓவியா இழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
இந்த நிகழ்ச்சியில், எல்லா சூழ்நிலையிலும் சிரித்த முகத்துடன் உலா வரும் ஓவியா, ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார் என்பது மறுக்க முடியாது. ஆனால், சில சினிமா பட வாய்ப்புகளை அவர் இழந்துள்ளார். 
 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அடுத்து இயக்க உள்ள படம்  ‘சீதக்காதி’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஓவியா ஒப்பந்தமாகியிருந்தார். 
 
ஆனால், தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதல், அவருக்கு பதிலாக ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ படத்தில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் இந்த வாய்ப்பு போனால் என்ன.. அவர் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் குடியேறியுள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் ஓவியாவை ரசிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆவணப் படத்துக்கு உதவிய விஜய் சேதுபதி