திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் சுமார் 28 நாட்களுக்குப் பிறகு இப்போது ஓடிடியில் வெளியாகின்றன.
ஓடிடிகளின் வருகை சினிமா தயாரிப்பில் கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்துள்ளது. இப்போது நேரடியாகவும் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகும் போக்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகின்றன. இந்த கால அளவை இன்னும் கூடுதல் ஆக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
28 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் மக்கள் பொறுமையாக ஓடிடியிலேயே படத்தைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுப்பதால் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. இதனால் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.