Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தி, ஆங்கிலத்திலும் உருவாகும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’

இந்தி, ஆங்கிலத்திலும் உருவாகும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’
, செவ்வாய், 18 மே 2021 (06:27 IST)
பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி உலக அளவில் அந்த திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி ஆஸ்கார் விருதுக்கு அந்த படம் தேர்வு செய்யப்பட்டது என்பது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது 
 
இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உருவாக்க முயற்சி செய்து வருவதாக பார்த்திபன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
என் தமிழ் அழகு.என்னை கூடுதல் அழகாக்குவதும் தமிழ்.  தட்டுத்தடுமாறி ஆங்கிலமும்,தப்பித்தவறி மற்ற மொழிகளும் பேச முயன்றதுண்டு.ஹிந்தி முஜே நஹி மாலும் ஹே! But ‘ஒத்த செருப்பு’ ஹிந்தியும் விரைவில் ஆங்கிலமும் பேச இருப்பதால்,இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு இரு மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் நிறைந்த ஒரு Personal Assistant (பால் பாகுபாடில்லை) தேவைப்படுகிறார்.ஈடுபாட்டுடன் பணிப்புரிய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள....
[email protected]
 
இதனை அடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் ஒத்த செருப்பு திரைப்படம் வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடித்துத் துன்புறுத்திய நடிகர் ..மனைவி தற்கொலை