Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பளார்னு விட்ட வில் ஸ்மித்திற்கு தடையா..? – நாளை முக்கிய முடிவு!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:40 IST)
ஆஸ்கர் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைந்த நடிகர் வில் ஸ்மித்திற்கு தடை விதிப்பது குறித்து நாளை முடிவு செய்யப்பட உள்ளது.

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிரிஸ் ராக் தனது மனைவி குறித்து கிண்டல் செய்ததற்காக நடிகர் வில் ஸ்மித் மேடையிலேயே வைத்து அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு பக்கம் அவரது செயலுக்கு பலர் ஆதரவாக பேசி வரும் அதேசமயம் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பலர் அவருக்கு அளிக்கப்பட்ட ஆஸ்கர் விருது திரும்ப பெற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் 18ம் தேதி நடக்க இருந்த ஆஸ்கர் விருது கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக வில் ஸ்மித் நடிக்கும் படங்கள் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments