Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு தலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் மறைவு… டி ராஜேந்தர் இரங்கல்!

Advertiesment
ஒரு தலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் மறைவு… டி ராஜேந்தர் இரங்கல்!
, வெள்ளி, 7 மே 2021 (07:44 IST)
மூத்த தயாரிப்பாளரும் இயக்குனருமான இப்ராஹிம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

ஒரு தலைராகம் படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். பல படங்களை தயாரித்திருந்தாலும் அவருக்கு 1981 ஆம் ஆண்டு வெளியான ஒரு தலைராகம் திரைப்படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அந்த படத்தை டி ராஜேந்தர் இயக்கி இருந்தாலும் டைட்டில் கார்டில் இப்ராஹிம் பெயர்தான் இயக்குனர் என்று வரும்.

இந்நிலையில் இப்ராஹிம்மின் மறைவுக்கு டி ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ‘ 1980ஆம் ஆண்டு வெளியான என் முதல் படமான 'ஒரு தலை ராகம்' படத்தின் தயாரிப்பாளர் இப்ராஹிம் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. மீளா அதிர்ச்சிக்கு உள்ளானேன். காரணம், அவர் அரங்கக்குடியில் பிறந்தவர் என்னை திரையுலகிற்கு அரங்கேற்றம் செய்தவர். வடகரை பக்கத்தில் வாழ்ந்தவர் என் திரையுலக வாழ்க்கை படகை கரை சேர்த்தவர். இன்று ஏன் மறைந்தார், இந்த உலகை விட்டு பிரிந்தார், கண்ணீர் கண்களை நனைக்கிறது. என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைக் கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பாலசரவணன் நெருங்கிய உறவினர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்