50 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ஷோலே.. யாரும் பார்த்திடாத ஒரிஜினல் கிளைமாக்ஸ் இணைப்பு..!

Siva
திங்கள், 17 நவம்பர் 2025 (18:17 IST)
இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படமான 'ஷோலே' அதன் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதுப்பிக்கப்பட்ட 4K தரத்தில், நீக்கப்பட்ட அசல் கிளைமாக்ஸுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
'ஷோலே: தி ஃபைனல் கட்' என்ற தலைப்பிலான இந்த சிறப்பு பதிப்பு, டிசம்பர் 12 அன்று வெளியாகவுள்ளது.
 
இயக்குநர் ரமேஷ் சிப்பி, 1975-ல் அவசரநிலை அமலில் இருந்தபோது, தணிக்கை வாரியத்தின் அழுத்தத்தால் படத்தின் கிளைமாக்ஸை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். அதிகப்படியான வன்முறை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாம்.
 
இன்றுவரை திரையிடப்பட்ட பதிப்பில் வில்லன் கப்பர் சிங் (அம்ஜத் கான்) காவல்துறையால் கைது செய்யப்படுவார். ஆனால், சலீம்-ஜாவேத் எழுதிய அசல் கிளைமாக்ஸில், தாக்கூர் பல்சால் சிங் (சஞ்சீவ் குமார்) பழிக்கு பழி வாங்க, முள் பதித்த காலணியால் கப்பர் சிங்கை கொன்றுவிடுவார். சட்டம் தன் கையில் எடுக்கப்படுவதை தவிர்க்கவே, பின்னாளில் இந்த முடிவு மாற்றப்பட்டது.
 
இந்த அசல் முடிவு, ஷோலே படத்துக்கு மேலும் ஒரு உச்சத்தைக் கொடுக்கும் என்று ரமேஷ் சிப்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கவர்ந்திழுக்கும் தமன்னா… வைரல் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை தமன்னாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தீபாவளி ரன்னர் ‘பைசன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி அப்படி செய்தது வருத்தமாக இருந்தது… மனநிலை பாதிக்கும் நிலைக்கு சென்றேன் –சேரன் ஆதங்கம்!

கௌரவ ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments