Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஓப்பன்ஹெய்மர்!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (09:10 IST)
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஓபென்ஹெய்மர். இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மர் மற்றும் அமெரிக்காவின் மன்ஹாட்டன் ப்ராஜெக்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.

ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் இந்தியாவில் சில சர்ச்சைகளை எதிர்கொண்டது. படத்தில் ஒரு உடலுறவுக் காட்சியின் போது பகவத் கீதையின் “நான் உலகை அழிக்கும் மரணமாகிவிட்டேன்” எனும் வசனம் இடம்பெற்றது இந்தியாவில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இதையடுத்து அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில் இப்போது வரை இந்தியாவில் இந்த திரைப்படம் சுமார் 84 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் விரைவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிடும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியில் ஆங்கராக மாறிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி.. என்ன நிகழ்ச்சி?

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் மனைவிக்கு விபத்து: அதிர்ச்சி தகவல்..!

காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஜான்வி கபூரின் அழகிய புகைப்பட தொகுப்பு!

நீங்க போட்டுகிட்டே இருங்க… நாங்க பாத்துகிட்டே இருப்போம் – சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments