Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு விற்றுத் தீர்ந்த ஐமேக்ஸ் டிக்கெட்கள்…!

Advertiesment
ஓப்பன்ஹெய்மர் படத்துக்கு விற்றுத் தீர்ந்த ஐமேக்ஸ் டிக்கெட்கள்…!
, வியாழன், 20 ஜூலை 2023 (07:32 IST)
ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைகளங்களில் படம் எடுத்து உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது முந்தைய படமான டெனட் காலத்தை திருப்புதல் வகை சயின்ஸ் பிக்சனில் பெரும் பிரம்மாண்டத்தை காட்டியது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானில் குண்டுபோடுவதற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் இயற்பியல் விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் மற்றும் குழுவினர் முதல் அணுகுண்டை வெடிக்க செய்தனர். அந்த ஓபன்ஹெய்மர் அணு ஆயுத சோதனை குறித்த அரசியல் பார்வையுடன் கூடிய படமாக இதை கிறிஸ்டோபர் நோலன் உருவாக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படம் ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் நிலையில் இந்தியாவிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்த படத்துக்கு ரசிகர்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் இந்த படத்துக்கு முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஐமேக்ஸ் திரைகளில் டிக்கெட் விலை அதிகமென்றாலும், அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவை ஈஷா மையத்தில் தியானத்தில் ஈடுபட்ட சமந்தா.. வெளியான போட்டோஸ்!