Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரின் திருமண நாளை முன்னிட்டு ...திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து!!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (23:15 IST)
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தனது திருமண நாளைக் கொண்டாடினார். இதைமுன்னிட்டு திரையுலகினர் பிரபல தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் நடிகர் மகேஷ்பாபு.

இவரை தெலுங்குசினிமாவின் பிரின்ஸ் என்று செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள். இவரது ஒவ்வொரு படமும் வசூலை வாரிக்குவிப்பதால் இவர் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தற்போது ’’சர்காரு வாரி பாட்டா’என்ற பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இன்று இப்படத்தைக் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

அதில்,  ‘சர்காரு வாரி பாட்டா’படம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்று  தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் கூறப்பட்டது..

இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் திருமணநாளை முன்னிட்டு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்து இன்று சமூக வலைதளங்களை அதிரவைத்தனர். இதில், மகேஷ்பாபு அவரது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்