Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லவ் இல்லாத லவ் மேரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா? ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..!

Advertiesment
லவ் இல்லாத லவ் மேரேஜ் பண்ணினா இவ்ளோவ் பிரச்சனையா? ஓ மை கடவுளே ஸ்னீக் பீக்..!
, வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (11:26 IST)
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் "ஓ மை கடவுளே" என்ற படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாகவாணி போஜன் நடிக்க முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 
 
அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் -ரித்திகா சிங் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதே இப்படத்தின் கசையம்சம்.
 
இந்த திரைப்படம் காதல் , பிரண்ட்ஷிப் உள்ளிட்டவரை உள்ளடக்கியுள்ளதால் பெருவாரியான இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் சோக் செல்வன் -ரித்திகா சிங் பிரிந்து விவாகரத்து பெற முடிவு செய்யும்போது விஜய் சேதுபதி வழக்கறிஞராக கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போயி வேற வேல இருந்தா பாருங்கடா? – தலைப்பாக பதிவு செய்ய சொன்ன இயக்குனர்!