நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னையில் ரோகிணி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) லாரியில் ஏறி நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று கீழே விழுந்தார்.
இதில், பரத்குமார் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்த இளைஞரின் உறவினர் யாரும் இதுபோன்று செய்ய வேண்டாம் என வேதனையுடன் பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில், வருமான வரித்துறை சார்பில் கோவையில் தொழிலதிபர்களுக்கான விருது விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வாரிசு படம் ரிலீஸுக்குப் பின் சில நாட்களில் விஜய்67 பட அப்டேட் வெளியாகும் என்றும், ரசிகர்கள் சினிமா பார்க்க வரும் போது பொறுப்புடன் செயல் பட வேண்டுமென தெரிவித்தார்.
மேலும், இது வெறும் சினிமாதான், உயிர்விடும் அளவு இதில் ஒன்றுமில்லை என்று தெரிவித்தார்.