Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை: ஜப்பான் நிலநடுக்கம் பற்றி ஜுனியர் என்.டி.ஆர். பதிவு

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (18:17 IST)
ஜப்பான் நாட்டில்  நேற்று முன்தினம் இஷிகாவா, நிகாடா உள்ளிட்ட மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.6 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுனாமி அலைகளும் தாக்கியது.

மேலும், மேற்கு கடலோரத்தில் உள்ள  நேடோ, இஷ்கவா அதன் சுற்றுப்பகுதிகளில் 21 முறை நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த  நிலநடுக்கத்தில் சிக்கி  20 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இந்தியா திரும்பியுள்ளார்.

புத்தாண்டை கொண்டாட தம் குடும்பத்துடன் ஜப்பான் சென்றிருந்த நிலையில், இதுகுறித்து ஜூனியர் என்.டி.ஆர் தன் எக்ஸ் தள பக்கத்தில், ''கடந்த வாரம் முழுவதும் ஜப்பானில்தான் தங்கியிருந்தேன். இன்றுதான் ( நேற்று) அங்கிருந்து  வீடு திரும்பியிருக்கிறேன். என்னால் அந்த நிலநடுக்க பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் வருந்துகிறேன்…உறுதியாக இருங்கள் ஜப்பான்… விரைவில் சரியாகும்… ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

அடுத்த கட்டுரையில்
Show comments