Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனியும் சின்னக் குழந்தை இல்லை.... டீனேஜ் வயதில் கையில் கத்தியுடன் தோன்றும் டோரா

Advertiesment
இனியும் சின்னக் குழந்தை இல்லை.... டீனேஜ் வயதில் கையில் கத்தியுடன் தோன்றும் டோரா
, வெள்ளி, 29 மார்ச் 2019 (14:52 IST)
டோராவின் சாகசப் பயணங்களைக் கடக்காத 90’ஸ் கிட்ஸ் இருப்பது ரொம்ப அபூர்வம். இன்றும் குழந்தைகளிடையே பிரபலமாக இருக்கும் டோரா, புஜ்ஜி அனிமேஷன் கேரக்டர்கள் பெரிய திரையில் கலக்க இருக்கின்றன. 

டோரா கேரட்கரை டீனேஜ் பெண்ணாக மாற்றி அதை வெள்ளித்திரையில் படமாக இயக்குகிறார் ஜேம்ஸ் பாபின். குட்டீஸ்களின் மனம்கவர்ந்த டோரா கதாபாத்திரத்தில் இசபெல்லா மோனர் நடிக்கிறார். `டோராவும் தொலைந்து போன தங்க நகரமும்' (ஆங்கிலத்தில் `டோரா அண்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்டு') என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அனிமேஷனாக அல்லாமல், ஒரு லைவ் ஆக்‌ஷன் படமாகத்தான் இருக்கும். இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனிமேஷனாக இல்லாமல் படம் லைவ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. படத்தில் டோரா கதாபாத்திரம் சிறுமியாக இல்லாமல் டீனேஜ் வயதில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

`தல’யுடன் நடிக்கக் காத்திருக்கிறேன்... நடிகர் ஜீவா ஓப்பன் டாக்