சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘கபாலி’ படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சாய் தன்ஷிகா. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘உரு’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் வெளியான உரு கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு நடந்த இடம் கொடைக்கானல். டிசம்பர் மாதம் என்பதால், குளிர் பாடாய் படுத்தியது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் மறந்துவிட்டது. அடுத்து ‘காலக்கூத்து’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கும் ‘விழித்திரு’ படத்தில் வடசென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறேன்.
‘டேவிட்’ படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் ‘சோலோ’ படத்தில் ஒரு பார்வையற்ற நடன கலைஞராக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ஜோடி துல்கர் சல்மான். எனக்கு சினிமாவிலும், வெளியிலும் காதல் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கெல்லாம் நேரமில்லை என்பதுதான் உண்மை. தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்.