Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்களை அவமதிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்: ப்ரித்விராஜ்

Advertiesment
பெண்களை அவமதிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்: ப்ரித்விராஜ்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (19:01 IST)
பாவனாவுக்கு நடந்த பாலியல் தொல்லையை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே தெரிவித்தனர். இதையடுத்து பிரபல நடிகர் ப்ரித்விராஜ், இனி பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களை பேசி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். 


 

 
நடிகை பாவனா அண்மையில் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளானார். இதையடுத்து அவரை கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு தற்போது பாவனா சமூக வலைதளத்தில் முதன்முதலாக அவரது கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
பாவனா மனமுடைந்து போய் இருந்த நிலையில், தற்போது அவரோடு ஆதம் என்ற படத்தில் நடித்து வரும் ப்ரித்விராஜ் அவருக்கு மன தைரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவரை படப்பிடிப்பு வரவழைத்து அவரை மன இறுக்கச் சூழலில் இருந்து விடுவித்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
 
இதையடுத்து ப்ரித்விராஜ், இனி பெண்களை இழிவுப்படுத்தும் வசனங்களை பேசி நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவலைகள் வரும்போது அழுவேன் - திரிஷா ஓபன் டாக்