Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோ ஓவியா, நோ பிக்பாஸ்: டுவிட்டரில் டிரெண்டுக்கு வந்த ஹேஷ்டாக்

நோ ஓவியா, நோ பிக்பாஸ்: டுவிட்டரில் டிரெண்டுக்கு வந்த ஹேஷ்டாக்
, சனி, 5 ஆகஸ்ட் 2017 (00:38 IST)
இன்றைய டுவிட்டரில் பெரும்பாலான டுவீட்டுக்கள் ஓவியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து தான் பதிவு செய்யப்பட்டு வருகிறது.



 
 
ஓவியா என்ன செய்தாலும் அனைவருக்கும் பிடிக்கின்றது.வீட்டை விட்டு வெளியே போகும்போது கூட சினேகதனுடன் சினேகமாக பேசி, காயத்ரி கொடுக்கும் சாப்பாட்டை சாப்பிடும் ஓவியா எந்த அளவுக்கு உயர்ந்தவர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
 
பரணியும் மற்றவர்களும் வெளியே போனதற்கும் ஓவியா போவதற்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்
 
இந்த நிலையில் ஒவியா இல்லையென்றால் பிக்பாஸ் பார்க்க மாட்டோம் என்று ஒரு குரூப் டுவிட்டரில் கிளம்பியுள்ளது. இதன் தாக்கமாக NooviyaNoBigboss என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் தற்போது டிரெண்டுக்கு வந்துள்ளது.
 
மன அமைதியின்றி தவித்ததால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவரை பத்திரிகையாளர்கள் அனைவரும் பேட்டி என்ற பெயரில் தொல்லை கொடுக்காமல் அவர் பூரண ஓய்வு எடுக்க ஒரு இரண்டு நாட்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாய் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வேலைக்காரன்' டீசர் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு