Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவைப் போல் இன்னொரு ஆளுமையைப் பார்க்க முடியாது- ரஜினிகாந்த்

ஜெயலலிதாவைப் போல் இன்னொரு ஆளுமையைப் பார்க்க முடியாது- ரஜினிகாந்த்
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (18:15 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75  வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினர், அமமுகனர் உள்ளிட்ட பலரும் ஜெயலிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு, மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவை வாழ்த்திப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்,ஜெயலலிதா இல்லாத சூழலில் அவரை   நினைவுபடுத்திக் கொள்கிறேன். அவரைப் போல் இன்னொரு ஆளுமையைப் பார்க்க முடியாது. அவர் அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல் கொண்டவர் ஆவார்.எம்.ஜி.ஆருக்குப் புரட்சித் தலைவர் என்ற பெயருளது. அவர், கட்சி ஆரம்பிதிது, ஆட்சிக்கு வந்து, அவர் மறைவுக்குப் பின் கட்சி பிளவுபட்டது. அப்போது, கட்சியில் திறமையான பலரும் இருக்க, தனி பெண்ணாக நின்று,கட்சியை ஒருங்கிணைத்து, பல ஆண்டுகள் தமிழ் நாட்டை ஆட்சி செய்தார்.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களும், அவரை மதித்து, அவரின் திறமையைக் கண்டு பிரமித்தனர்.

அவருக்கும் எனக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு,  அவருக்கு எதிரான பேச வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது. பின்னர், என் மகள் திருமணத்திற்கு அவரை அழைத்தபோது, எல்லாவற்றையும் மறந்து திருமணத்திற்கு வந்து நடத்திக் கொடுத்தார்….கருணை உள்ளம் கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது, நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி கிறங்க வைக்கும் ஷாலு ஷம்மு!