Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜேந்திர சோழனின் மனைவியாக நடிக்கும் சன்னி லியோன்–நீதிமன்றம் அதிரடி

Advertiesment
ராஜேந்திர சோழனின் மனைவியாக நடிக்கும் சன்னி லியோன்–நீதிமன்றம் அதிரடி
, புதன், 31 அக்டோபர் 2018 (15:18 IST)
உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை சன்னி லியோனி முதல் முதலாக அறிமுகமாகும் தமிழ்ப்படத்தில் ராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவியாக நடிக்கிறார்.

கனடாவைச் சேர்ந்த இந்தோ அமெரிக்க நடிகை சன்னி லியோனி. இவர் ஆரம்பக்காலங்களில் ஆபாசப்படங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். திடீரென அவர் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பால்வுட்டில் அவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்ததை அடுத்து அவரைக் கதாநாயகியாக வைத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வீராமதேவி எனும் படம் உருவாகிவருகிறது. வீராமாதேவி படத்தில் முதலாம் ராஜெந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் குதிரைச் சண்ட, வாள் சண்டை போன்றவற்றில் பயிற்சி எடுத்து வருகிறார்.

இராஜேந்திர சோழனையும் அவரது மனைவியையும் மக்கள் பல இடங்களில் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அதனால் ஆபாசப் பட நடிகையான சன்னி லியோனி அவரது கதாபாத்திரத்தில் நடிப்பது அவருக்கு செய்யும் அவமானமாகும். என்வே அவரை அந்த படத்தில் இருந்து நீக்கவேண்டும் எனக் கர்நாடகாவில் சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதிகள் நடிகர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் உரிமை அச்வர்களுக்கு உள்ளது. எனவே இந்த மனுவை பொதுநல மனுவாக ஏற்கமுடியாது எனக் கூறினர்.

மேலும் இதுபோன்ற மனுக்களை ஏன் தாக்கல் செய்கிரீர்கள் என தங்கள் அதிருப்தியையும் பதிவு செய்தனர். இதனால் மனுதாரர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். எனவே வீரமாதேவியாக சன்னி லியோனி விரைவில் ரசிகர்களை சந்திக்க வருவார் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளம் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக நடிகை