பைசன் இசையமைப்பாளரை ஹீரோவாக்கும் பா ரஞ்சித்!

vinoth
செவ்வாய், 25 நவம்பர் 2025 (18:04 IST)
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் சமீபத்தில் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றுள்ள ‘பைசன்’ பட பாடல்கள்தான் நிவாஸ் கே பிரசன்னவை புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. ‘பைசன்’ படத்தின் வெற்றிக்கு அவரின் பின்னணி இசையும் பாடல்களும் பெரும்பங்காற்றியுள்ளன.

இதையடுத்து அவர் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அவரும் அரிதாரம் பூசி நடிகராக மாறவுள்ளார். ஜடா மற்றும் பறை ஆகிய படங்களை இயக்கிய குமரன் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இயக்குனர் பா ரஞ்சித்தும் இணைந்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரித்து பிரித்து விற்கப்பட்ட ‘ஜனநாயகன்’ தமிழ்நாடு விநியோக உரிமை… வியாபாரத்தில் சாதனை!

வேலை நாளில் வீழ்ச்சியை சந்தித்த கவினின் ‘மாஸ்க்’ படத்தின் வசூல்!

ரஜினி படத்தில் ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? இதுதான் வளர்ச்சி

கில்லி ஸ்டைலில் ஒரு படம்…தனது அடுத்த கதை குறித்துப் பேசிய டியூட் இயக்குனர்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் டைட்டில் என்ன?... தயாரிப்பாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments