Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தின் கிள்ம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தின் கிள்ம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!
, புதன், 27 டிசம்பர் 2023 (13:53 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள் நிலையில் முதல் முதலாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. படம் விலங்குகள் சம்மந்தப்பட்ட ஒரு ஆன்மீக ரீதியிலான படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரி ரிலீஸுக்கு தயாராகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் திரைப்படம்!