டிசம்பரில் வெளியாகிறது நிவின் பாலியின் தமிழ்ப் படம்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (13:51 IST)
நிவின் பாலி நடித்துள்ள தமிழ்ப் படம், டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகிறது.


 


‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவின் பாலி. அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய இந்தப் படம், தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது. நஸ்ரியா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் நிவின் பாலி. ‘ரிச்சி’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை, புதியவரான கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். நட்ராஜ் என்கிற நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், டிசம்பர் முதல் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில்தான் பாபி சிம்ஹாவின் ‘திருட்டுப்பயலே 2’ படமும் ரிலீஸாகிறது. இதன்மூலம் நண்பர்களான பாபி சிம்ஹா, நிவின் பாலி இருவரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments