நிவின் பாலி நேரம், பிரேமம் மற்றும் ரிச்சி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய அவர் சமீபத்தில் உடல் எடை பெருத்து குண்டாக காணப்பட்டார். இது சம்மந்தமாக இணையத்தில் ட்ரோல்கள் பகிரப்பட்டன.
இந்நிலையில் இப்போது மீண்டும் நிவின் பாலி 20 கிலோ அளவுக்கு உடல் எடையைக் குறைத்து மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்துக்கு மாறியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.