Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த 3 தகுதிகள் இருந்தால் ஓகே - திருமணத்திற்கு ரெடியானார் நிவேதா தாமஸ்!

Advertiesment
இந்த 3 தகுதிகள் இருந்தால் ஓகே - திருமணத்திற்கு ரெடியானார் நிவேதா தாமஸ்!
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (07:43 IST)
மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக "தர்பார்" படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்தார்.

இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வரும் நிவேதா தாமஸிற்கு 24 வயது ஆகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் திருமணம் மற்றும் வருங்கால கணவர் குறித்து கேட்டதற்கு, " 1. அவர் எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கவேண்டும், 2.   பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டும். 3. ட்ராவலிங் செய்வதில் விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும். இந்த மூன்று தகுதிகளும் இருந்தால் திருமணத்திற்கு ஓகே சொல்லிடுவேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைகீழ நின்னாலும் நான் பிக்பாஸிற்கு போகமாட்டேன் - நடிகை சுனைனா!