Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுக்காக தான் இந்த முடிவு... கைக்குழந்தையை விட்டு சென்ற நிஷா உருக்கம்!

Advertiesment
இதுக்காக தான் இந்த முடிவு... கைக்குழந்தையை விட்டு சென்ற நிஷா உருக்கம்!
, திங்கள், 5 அக்டோபர் 2020 (08:27 IST)
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கலை நிகழ்ச்சியுடன் அறிமுகம் செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் என யூகிக்கப்பட்ட பட்டியலில் இருந்தவர்களே பெரும்பாலும் இருந்தனர். ஆர்ஜே அர்ச்சனா உள்பட ஒரு சிலர் மட்டுமே யூகிக்கப்பட்டவர்களில் இடம்பெறவில்லை. இதில் வதந்திகள் பரவினாலும் யூகிக்கப்படாத பட்டியலில் இருந்த அறந்தாங்கி நிஷா தன்னுடைய ஒரு வருட கைக்குழந்தையை விட்டு பிக்பாஸிற்கு சென்றுள்ளார்.

webdunia

இதுகுறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், குடும்ப புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "நீங்க இல்லைன்னா நிஷா இல்லமா. என்ன சொன்னாலும் எப்பவும் நீங்க மட்டும் தான் என்னோட நம்பிக்கை. என்கிட்ட பேசாம ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டீங்க ஆனால்,  நமக்காகத்தான் இந்த முடிவு என்று கூறியுள்ளார். மேலும், "என் உயிரானவன். என் தங்க மகனே லவ் யூ டா , மச்சான் எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருங்க ஓகே வா? என்று நிஷா உருக்கமாக பதிவிட்டு பிக்பாஸிற்குள் தன் குடும்பத்தினருக்காக நுழைந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்!