Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனுக்கு "கண்ணான கண்ணே" பாடலை தாலாட்டு பாடும் நிலானி - வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (08:13 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணைந்து நடித்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் விவசாயம் , தந்தை - மகள் பாசம் உள்ளிட்டவற்றை மைய கருவாக கொண்டு வெளிவந்தது.

இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்த நிலையில் அப்பா - மகள் பாசத்தை வெளிப்படுத்தும் கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.  இந்நிலையில் தற்ப்போது சீனாவிலிருந்து ஒலிபரப்பாகும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் தொகுப்பாளராகப் பணியாற்றி பெரும் பிரபலமான சீன பெண் நிலானி தனது மகனுக்கு  தாலாட்டாக "கண்ணான கண்ணே"பாடலை பாடி தூங்க வைத்துள்ளார்.

இந்த வீடியோ வழக்கம் போலவே இணையத்தில் வெளியாக சூப்பர் வைரலாகி வருகிறது. அத்துடன் நிலானி பேசுவதில் மட்டுமல்ல பாடுவதிலும் சிறந்து விளங்குகிறார் என அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் தனது மகனுக்கு சிறந்த தமிழ் பெயரை பரிந்துரை செய்யுங்கள் என கேட்டிருக்கிறார். இதோ அந்த அழகிய வீடியோ..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments