Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகிறார் "தெய்வமகள்" வாணி போஜன்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (07:56 IST)
சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.  

சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இரண்டாவது படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகிறார். ஆம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பாக கார்த்திக் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. கடந்த வாரம் படத்தின் பூஜை நடைபெற்று படவேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments