Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தைகளை பரிதவிக்கவிட்டு எஸ்கேப்பான நடிகை நிலானி..

Advertiesment
குழந்தைகளை பரிதவிக்கவிட்டு எஸ்கேப்பான நடிகை நிலானி..
, செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (13:17 IST)
நடிகை நிலானி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயானவர் என்பது தெரியவந்துள்ளது.

 
காந்தி லலித்குமார் என்பவருடன் நெருக்கமாக பழகிவிட்டு, தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துகிறார் என சீரியல் நடிகை நிலானி புகார் கொடுக்க, விரக்தியில் காந்தி லலித்குமார் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். 
 
இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 
webdunia

 
போலீசாரிடம் நிலானி புகார் அளித்த போது, காந்தியுடன் நட்பாக மட்டுமே பழகினேன். ஆனால், அதை தவறாக புரிந்து கொண்டு என்னை அவர் திருமணத்திற்காக வற்புறுத்துகிறார் என புகார் அளித்திருந்தார். இதனை அடுத்தே, தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு இப்படி நிலானி பொய் சொல்கிறாரே என்கிற கோபத்திலும், நிலானி தன்னை விட்டு பிரிய முடிவெடுத்ததையும் தாங்கிக்கொள்ள முடியாத காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், நிலானிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்று அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும், கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த அவர், அதன் பின்னரே அவர் காந்தி லலித்குமாருடன் நெருக்கமாக பழகியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலானி கூறிய அந்த ஒரு வார்த்தை - தற்கொலை செய்த காதலர்