சென்னையில் இரவு பார்ட்டி: ஷங்கர் பட நடிகை மீது வழக்குப்பதிவு
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	சென்னை அருகே சொகுசு விடுதி ஒன்றில் இரவு பார்ட்டி நடத்திய ஷங்கர் படத்தில் நடித்த நடிகை ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 
 
									
										
			        							
								
																	
	 
	சென்னை அருகே கானத்தூர் என்ற பகுதியில் உள்ள சொகுசு பங்களா ஒன்றை சினிமா படப்பிடிப்புக்கு என வாடகைக்கு எடுத்துள்ளார் நடிகை கவிதாஸ்ரீ. இவர் ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது 
 
									
											
									
			        							
								
																	
	 
	வாடகைக்கு எடுத்த சொகுசு பங்களாவில் பிரபலங்களையும் இளம் பெண்களையும் வரவழைத்து அவர் சொகுசு பார்ட்டி நடத்தி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சொகுசு பங்களாவை சுற்றி வளைத்து அதில் இருந்த அனைவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	கவிதாஸ்ரீ உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்ள கவிதாஸ்ரீ ஒவ்வொருவரிடமிருந்தும் ரூபாய் 1599 பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இரவு பார்ட்டி நடத்தப்பட்ட சொகுசு விடுதி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது