செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படத்தின் ஆடியோ உரிமையை சோனி சவுத் மியூசிக் கைப்பற்றி உள்ளது.
எஸ். ஆர். பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் படம் என்ஜிகே. இதில் சூர்யா, சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரசியல் படமான என்ஜிகே சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜிகே படம் தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியதிருந்ததால், படம் வெளியாகவில்லை. இந்நிலையில் என்ஜிகே அப்டேட் கேட்டு தினமும் செல்வராகவன் மற்றும் பட தயாரிப்பாளர் பிரபுவை ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். இதற்கு அண்மையில் கூட செல்வராகவன், இதற்காக ரசிகர்களை கடிந்து கொண்டார். இந்நிலையில் என்ஜிகே படத்தினை சோனி மியூசிக் கைப்பற்றி உள்ளதால் இது தொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது. இதனை பார்த்த சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.
விரைவில் என்ஜிகே குறித்து முக்கிய அப்டேட் வர வாய்ப்பு உள்ளது.