Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேஜிஎஃப்- 2 படத்தின் அடுத்த அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Advertiesment
Next update of KGF-2 movie
, வெள்ளி, 18 மார்ச் 2022 (21:51 IST)
பிரபல நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

 
இதே தேதியில்தான் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் வெளியாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், பீஸ்ட் ஒரு  நாள் முன்னதாக 13 ஆம் தேதி ரிலீஸாலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’கேஜிஎஃப் 2’ படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40  மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து யார் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், இயக்கு நர்    நீல் பிரசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கே.ஜி.எஃப் 2 படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், வரும் மார்ச் 21 ஆம் தேதி காலை 11:07 மணிக்கு இப்படத்தில் இடம்பெற்றுள்ள  #Toofan  என்ற 2 வது சிங்கிலின் லிரிக்கர்  வீடியோ  வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவின் அன்பும் பாசமும் - பிரபல இசையமைப்பாளர் டுவீட்