Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நடராஜ்!

Advertiesment
ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நடிகர் விஷ்ணு விஷால்-ரஜினி நடராஜ்!
, செவ்வாய், 31 ஜனவரி 2017 (11:54 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் கதாநாயகர்களுல் ஒருவர். நடிகர் விஷ்ணு விஷால் - ரஜினி நடராஜ் ஆகியோருக்கு கடந்த  2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையின்  படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.

 
கல்லூரியில் தனது  ஜீனியரான ரஜினி நடராஜை விஷ்ணு காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரஜினி நடராஜ் பிரபல  நடிகரும், இயக்குநருமான கே.நடராஜின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு முன்னதாக இருவரும் 4 வருடங்கள்  காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், விஷ்ணு தனது டுவிட்டர் பக்கத்தில், "கடவுளே! எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இது. எனக்கும், ரஜினிக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாதவனே பெட்டர்... விக்ரமுக்கு நாமம் போட்ட சாய் பல்லவி