Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய ட்ரெய்லர் வெளியீடு!!

‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ புதிய ட்ரெய்லர் வெளியீடு!!
, வெள்ளி, 24 ஜூன் 2022 (16:33 IST)
'ராக்கெட்டரி' ஜூலை 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

 
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் இருந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
 
இந்நிலையில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் டிரெய்லர் உங்கள் பார்வைக்கு... 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!