Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம் ஜி ஆர் நடிப்பில் உருவாகிறது பொன்னியின் செல்வன்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:10 IST)
பொன்னியின் செல்வன் நாவல் பல்வேறு வடிவங்களில் இப்போது திரைப்படங்கள் மற்றும் வெப் தொடராக உருவாகி வருகிறது.

எழுத்தாளர் கல்கி 1950 களில் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் நாவல் உலகின் கிளாசிக் நாவலாக பல ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக சந்தையின் போதும் அதிகமாக விற்கும் புத்தகங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் நாவல் கண்டிப்பாக முன்னிலையில் இருக்கும்.

இந்த நாவலை எம்ஜிஆர் படமாக்க வேண்டும் என்று முயன்று, அதற்காக இயக்குனர் மகேந்திரனை திரைக்கதை எழுத வைத்தார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை. பின்னர் தன் தயாரிப்பில் கமல் நடிப்பில் அதை உருவாக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னம் பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார்.

அவரை தவிர ரஜினியின் இளையமகள் பொன்னியின் செல்வனை வெப் தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது எம் ஜி ஆரை அனிமேஷன் கதாபாத்திரமாக மாற்றி பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும், வெப் சீரிஸாகவும் உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதில் எம் ஜி ஆர் வந்தியத்தேவன் மற்றும் அருள்மொழிவர்மன் என்ற இரு கதாபாத்திரங்களிலும் கலக்க உள்ளாராம். விரைவில் இதைப் பற்றிய மேலதிக விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுனா நான் மனுஷனே கிடையாது! - நாய் பிரியர்களை கிழித்த நடிகர் அருண்!

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கட்டா குஸ்திக்கு செகண்ட் ரவுண்ட்டுக்கு தயாரான ஐஸ்வர்யா லஷ்மி!

1200 கோடி ரூபாய் பட்ஜெட்… 120 நாடுகளில் ரிலீஸ்… ராஜமௌலி படம் பற்றி வெளியான தகவல்!

ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘லோகா’… படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகைக்கு பிஸ்னஸ் பேசும் ஓடிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments